Connect with us

150 ஆடுகள் 300 கோழிகள்: முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களின் பிரியாணி விருந்து

News

150 ஆடுகள் 300 கோழிகள்: முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களின் பிரியாணி விருந்து

896d2c9ad23999dea62d84847d25e1d8

தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த ஓட்டல்களில் பிரியாணி உள்பட அனைத்து உணவுகளும் சிறப்பாக இருக்கும் என்பதும் தெரிந்ததே 

முனியாண்டி விலாஸ் பிரியாணி என்றாலே தனி மதிப்பு என்பதும் உணவுப் பிரியர்கள் அதனை விருப்பத்துடன் வாங்கி சாப்பிடுவார்கள் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் மதுரை அருகே உள்ள திருமங்கலம் என்ற இடத்தில் உள்ள முனியாண்டி கோவிலுக்கு வந்து சாமி வழிபாடு செய்வார்கள் அப்போது அவர்கள் பிரம்மாண்டமாக பிரியாணியை தயாரித்து அனைவருக்கும் பிரியாணி விருந்து வைப்பது வழக்கமாக உள்ளது 

b4e7bc543862d9f3d4d6bce322d7635e

இந்த நிலையில் இன்று முனியாண்டி கோயிலில் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது. திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலில் இன்று நடைபெற்ற பிரியாணி பிரசாதத்தை அந்த பகுதியில் உள்ள ஏராளமானோர் வாங்கி சாப்பிடுகின்றனர்.

முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் அனைவரும் கூடி வழிபாடு நடத்தியதில் 150 ஆடுகள் 300 கோழிகளை கொண்டு பிரியாணி உணவுச் அமைக்கப்பட்டதாகவும் இந்த உணவுகள் அந்த அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top