15 வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரர்கள்; கத்திமுனையில் கடத்தி கதறக் கதற பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

மகாராஷ்டிராவில் 15 வயது சிறுமி 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மற்றும் டிசம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 15 வயது சிறுமியை கத்தியைக் காட்டி கடத்தியுள்ளனர். அந்த சிறுமியை லாட்ஜ் ஒன்றிற்கு அழைத்துச் சென்று, 6 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அத்துடன் சிறுமியை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த கும்பல், லாட்ஜில் நடந்து பற்றி வெளியே சொன்னால் ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து விடுவோம் என எச்சரித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியும் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு தாயாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.