Connect with us

15-வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: நிர்வாணமாக ரத்தம் சொட்ட சொட்ட சாலையை கடந்த அவலம்!!!

sexual harassment

செய்திகள்

15-வயது சிறுமி கூட்டு பலாத்காரம்: நிர்வாணமாக ரத்தம் சொட்ட சொட்ட சாலையை கடந்த அவலம்!!!

வட மாநிலங்களைப் பொறுத்தவரையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் உ.பியில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், நிர்வாணமாக 2 கிலோமீட்டர் வரையில் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 15 வயது சிறுமி ஒருவர் பக்கத்து கிராமத்தில் ஒரு கண்காட்சியை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது 5 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் சிறுமியை நிர்வாணமாக காரில் இருந்து தூக்கி வீசி தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உதவியற்ற நிலையில் நிர்வாணமாக நடந்து செல்லும் போது யாரும் உதவிசெய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் காவல்துறையினர் செப்டம்பர் 15ஆம் தேதி ஒருவரை கைது செய்ததாக கூறியுள்ளார்.

தற்போது கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சாலையை கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top