வடமாநிலங்களில் அதிகரித்த பனிமூட்டம்; 15 ரயில்கள் இயக்குவதில் தாமதம்!!

எந்த ஒரு ஆண்டில் இல்லாத வகையில் நடப்பாண்டு குளிர்காலத்தில் பனிமூட்டம் என்பது அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அதிகாலை நேரங்களில் சாலையில் எதிரேவரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கூட பனிமூட்டம் காணப்படுகிறது.

இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் காணப்படுகின்ற மலையோர பகுதிகளில் பனிமூட்டம் நிலவும் என்று நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  இவை தமிழகத்திலேயும் நிலவுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வடமாநிலங்களில் நடப்பாண்டில் பனிமூட்டம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட  வடமாநிலங்களில் பனிமூட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

இதன் விளைவாக 15 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பனிமூட்டம் காரணமாக வடக்கு ரயில்வே பகுதியிலிருந்து சுமார் 15 வயதில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜிடி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 15 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.