கோர விபத்து: டிரக் மீது பேருந்து மோதியதில் 15 பேர் பலி!!

நாடு முழுவதும் நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுப்பார்கள்.

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்தியப்பிரதேசம் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் உ.பி சென்றதாக கூறப்படுகிறது.

மீண்டும் சோகம்!! சென்னையில் விசாரணை கைதி தற்கொலை..!!

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதியது.

இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதனிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உச்சம் தொட்ட தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!!

அதோடு காயமடைந்த 70-க்கும் மேற்பட்டவர்களை ரேவா சஞ்சய் காந்தி மெம்மோரியல் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விபத்து குறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment