Connect with us

36 மணி நேரத்தில் 15 படுகொலைகள்: எங்கே போகிறது தமிழகம்?

ஈபிஎஸ்

தமிழகம்

36 மணி நேரத்தில் 15 படுகொலைகள்: எங்கே போகிறது தமிழகம்?

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச் செயல்கள் அதிகமாக நடைபெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம் முழுவதும் கொலை களமாக மாறி வருவதாகவும், இத்தகைய சம்பவத்தினால் மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள் தமிழகத்தில் நடைப்பெற்று இருப்பதாக செய்தி வெளியாகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே சட்டம்-ஒழுங்கை தாமே நேரடியாக கவனித்து வருவதாக சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் கூறியிருப்பதை இபிஎஸ் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்நிலையில் இத்தகைய செயல் தான் சட்டம் ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். அதோடு இத்தகைய படுகொலை சம்பவங்களுக்கு காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் தமிழகத்தில் நடைப்பெறாதவாறு தமிழக முதல்வர் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top