Connect with us

அமலாகிறதா 15 மணி நேர மின்வெட்டு..?பீதியில் பொதுமக்கள் !!

electric post

தமிழகம்

அமலாகிறதா 15 மணி நேர மின்வெட்டு..?பீதியில் பொதுமக்கள் !!

அமலாகிறதா 15 மணி நேர மின்வெட்டு..?பீதியில் பொதுமக்கள் !!

தமிழக மின் வாரியம் உடனடியாக நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் கடந்த 2011, 2012 ஆண்டுகளில் மின்தடை ஏற்பட்டதை போன்று 15 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் தினசரி மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை. நாள்தோறும் 4320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் நிலையில் மத்திய அரசின் நிலக்கரி நிறுவனம் மூலம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி மட்டும் கிடைப்பதால் 20 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரிக்கு இறக்குமதியை நம்பியுள்ளது.

தமிழக மின்வாரியம் கடந்த 1990 ஆண்டு முதல் இந்தோனேஷியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்தது. இந்நிலையில் நிலக்கரி இறக்குமதி குறித்து மத்திய அரசின் கொள்கைகள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுகின்றன.

இதனிடையே உள்நாட்டு நிலக்கரி மூலம் 1 யூனிட்க்கு 3.5 ரூபாய் செலவாகிறது. ஆனால் வெளிநாட்டு நிலக்கரி மூலம் 1 யூனிட்க்கு 7 ரூபாய் செலவாகிறது. இந்த சூழலில் நாள்தோறும் 20 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதால் உடனடியாக தமிழக அரசு நிலக்கரியை இறக்குமதி செய்யும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இல்லையெனில் கடந்த 2011, 2012 ஆண்டுகளில் மின்தடை ஏற்பட்டதை போன்று 12 முதல் 15 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் நிலை உருவாகும் என மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top