Connect with us

கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஐந்து பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!!

நீதிபதி

தமிழகம்

கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஐந்து பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அந்த பள்ளியில் பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பள்ளியின் வேன் வாகனங்களை வரிசையாக தீ வைத்து எரித்தனர். மேலும் பள்ளியின் நுழைவாயிலை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக காவல்துறையினர் கலவரக்காரர்களை ஒவ்வொருவராக பிடித்துக் கொண்டு வருகிறது.

மேலும் கலவரம் எந்த கோணத்தில் நடைபெற்றது என்பதனையும், இதற்கு பின்னணியில் யார் உள்ளார் என்பதையும் பற்றி தீவிர விசாரணை நடத்திக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் கைதான பள்ளி நிர்வாகிகள் உட்பட ஐந்து பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆசிரியர்கள் ஹரிப்பிரியா, கிருத்திகா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த இரண்டாவது நீதிமன்ற நடுவர் முகமது அலி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 113 பேரை போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top