சென்னை அருகே தாவரவியல் பூங்கா; ‘1-10 ஆம் வகுப்பு’ மாணவர்களுக்கு ‘இலவச பாடப்புத்தகங்கள்’ வழங்க 15 கோடி நிதி ஒதுக்கீடு!!
இன்றையதினம் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழக அரசின் சார்பில் தற்போதைய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து கொண்டு வருகிறார்.
அம்ருத் திட்டத்தின் கீழ் ஏழை எளியவர்களுக்கு வீடு கட்டுவதற்கு உரிய நிதி ஒதுக்கீட்டை பற்றி அறிவித்தார். அதோடு மட்டுமில்லாமல் ரூபாய் 200 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் கல்வி சம்பந்தமாகவும் நிதி ஒதுக்கீட்டினை அவர் அறிவித்துள்ளார். அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
அதோடு மட்டுமில்லாமல் தலைநகர் சென்னையில் அருகே தாவரவியல் பூங்கா அமைக்க உள்ளதாக அவர் கூறினார். விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூபாய் 10 கோடி அளவில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
பூண்டி, தர்மபுரி மற்றும் குற்றாலம் பழங்குடியினர் அகழ் வைப்பகம் ரூபாய் 10 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
