நூறு கோடிக்கும் அதிகமான தடுப்பூசியை செலுத்தி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது இந்தியா. இதற்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் தான்.
நம் தமிழகத்திலும் முன்பு ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. பின்னர் வாரத்திற்கு இரண்டு முறை தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இவ்வாறு தமிழகத்தில் இன்றையதினம் 14ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் 20 லட்சத்திற்கும் மேலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று நடைபெற்ற 14வது மெகா தடுப்பூசி முகாமில் 20 லட்சத்து 45 ஆயிரத்து 347 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
முகாமில் முதல் தவணையாக 6 லட்சத்து 81 ஆயிரத்து 346 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது தவணையாக 13 லட்சத்து 64 ஆயிரத்து 001 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
தமிழகத்தில் இதுவரை 82.48 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். வெறும் 51.31 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.