ஒமைக்ரானின் அதிவேக பரவலின் காரணமாக இந்த ஆண்டு இறுதிவரை மும்பையில் 144 தடை உத்தரவு!

கடந்த கொரோனா தொற்றில் அதிகம் பாதித்த மாநிலமாக காணப்படுவது மகாராஷ்டிர மாநிலம் தான். இந்த நிலையில் தற்போது அதி வேகத்தில் பரவி வரும் ஒமைக்ரான் தொற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகமாக காணப்படுகிறது.

குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் அதிக அளவு  ஒமைக்ரான் தொற்று பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மும்பை மாநகராட்சி டிசம்பர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பதன் காரணமாக மும்பை மாநகரம் முழுவதும் இந்த ஆண்டு இறுதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடைகளுக்கு வருபவர்கள் இரண்டு தடுப்பூசியினை போட்டிருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கடைக்கு செல்ல அனுமதி கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கொரோனா  பரிசோதனை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment