Connect with us

குத்தாலம் அருகே 144 தடை உத்தரவு அமல்-இரவு 10 மணி வரை வெளியே வர தடை.!!

144

தமிழகம்

குத்தாலம் அருகே 144 தடை உத்தரவு அமல்-இரவு 10 மணி வரை வெளியே வர தடை.!!

கடந்த சில நாட்களாக விவசாயிகள் நேரடி நெல் விதைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் நிலம் உரிமையாளர்களிடையே பெரும் போராட்டம் நடைபெற்றது.

இதனை தடுப்பதற்காக போலீஸ் சென்ற போது போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது குத்தாலம் அருகே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேல பருத்திக்குடி, கீழ பருத்திக்குடி கிராமங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்புக் கிடையே இன்று மூன்று விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்ய உள்ளதால் இரவு 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் விதைப்பு செய்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூலித் தொழிலாளர்கள் குற்றசாட்டினை முன் வைத்துள்ளனர்.

இதனால் கூலி விவசாய தொழிலாளிகள் மற்றும் நில உரிமையாளர்கள் இடையே இத்தகைய பிரச்சனை வலுப்பெற்று காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top