Connect with us

கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு அமல்!!

lockdown

தமிழகம்

கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு அமல்!!

கள்ளக்குறிச்சியில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தனியார் பள்ளியில் போராட்டக்காரர்கள் சூறையாடி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

குறிப்பாக பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளுக்கு தீ வைப்பு மற்றும் பொருட்களை உடைத்தல் போன்ற அசம்பாவிதங்களில் போராட்டக்காரர்கள் இடுப்பட்டு வருகின்றனர்.

வன்முறை வெடித்ததை அடுத்து தனியார் பள்ளியில் அதிரடிப்படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது கள்ளக்குறிச்சிக்கு உள்துறை செயலாளர், டிஜிபி செல்ல தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனிடையே வன்முறையின் காரணமாக கள்ளக்குறிச்சி தாலுக்காவில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top