Connect with us

தமிழகத்தில் 144 தடை உத்தரவு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழகம்

தமிழகத்தில் 144 தடை உத்தரவு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

59c303106b04eb7ca677d3eef998f436

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தற்போது தான் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது

இதனை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ள நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன என்பதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி அரும்பாவூர் பேரூராட்சி மற்றும் லப்பைக்குடிகாடு பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு மட்டும் 144 தடை உத்தரவு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top