தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய தற்போது உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான். நம் இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் பரவல் ஆங்காங்கே கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவார்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படும் வருகின்றனர்.
இவ்வாறு இருப்பினும் நம் இந்தியாவில் ஒமைக்ரான் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்றையதினம் மகாராஷ்டிராவில் புதிதாக 7 பேருக்கு ஒமைக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசு மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒமைக்ரான் தொற்று பாதிப்பு பரவுவதை தடுக்கும் நோக்கில் மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மாநிலங்களிலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 17 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.