மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாள்: ஸ்டாலின் மற்றும் முருகன் புகழாரம்!

விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இருப்பர். அவர்களில் தனது கவிதையால் மக்களிடையே விடுதலை உணர்ச்சியை உண்டாக்கியவர் மகாகவி பாரதியார். இவர் அன்றைய திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரம் பகுதியில் பிறந்தார்.

bharath

இவரின் ஒவ்வொரு பாடல்களும் மக்களிடையே விடுதலை உணர்வை அதிகரித்துக்கொண்டே இருக்கும். இத்தகைய மகாகவி பாரதியார் இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை வாழ்த்தி புகழ்ந்துள்ளார்.

அதன்படி நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா, திறம்பாட வந்த மறவன், அறம்பாட வந்த அறிஞன் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் இத்தகைய ட்விட் செய்துள்ளார்,

படரும் சாதிப்படைக்கு மருந்தாம் மகாகவி பாரதியாரின் 140 வது பிறந்தநாள் இன்று என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். தமிழுக்கு தொண்டு செய்த அப்பைந்தமிழ் தேர்ப்பாகன் நினைவைப் போற்றிடும் அரசின் முயற்சிகள் தொடர்ந்திடும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முன்னாள் பாஜக தமிழ் மாநில தலைவர் வேல்முருகனும் பாரதியார் பற்றி கூறியுள்ளார். அதன்படி தேச ஒற்றுமைக்காக புரட்சிகரமான கவிதைகளைப் படைத்த தமிழ் உலகின் ஒப்பற்ற கவிஞர் பாரதியார் என்றும் கூறினார். தனது எழுத்துக்களால் தேசபக்தி தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment