14 வயது மாணவிக்கு ஆண் குழந்தை: ஜார்கண்ட்டில் பரபரப்பு!!

கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களை பொறுத்த வரையில் குற்றச்சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஜார்கண்டில் 14-வயது சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கு அப்பகுதியை சேர்ந்த 20 வயதான ஜெய்ராம் நாயக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து ஜெய்ராம் நாயக் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தேர்வர்களே அலர்ட்!! டிஆர்பி தேர்வு அட்டவணை வெளியீடு.!

இந்த சம்பவத்தில் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். இதனை அறிந்த ஜெய்ராம் நாயக் கிராமத்தை விட்டு வெளியோ ஓட்டம் பிடித்துள்ளார். இதன் காரணமாக சிறுமி தரப்பில் சிம்தேகாவில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தற்போது இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் பள்ளி செல்வதை நிறுத்தி விட்ட சிறுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதையடுத்து சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது; ஐகோர்ட் கிளை அதிரடி!!

மேலும், பள்ளி பருவத்தில் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் குறித்து குழந்தைகள் நலக் குழுவ விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.