மக்களே தயார்! அடுத்த மூணு மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை!!

நம் தமிழகத்தில் நாள்தோறும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் பல மாவட்டங்களில் மழை நீர் வீடுகள், சாலைகள், தெருக்களில் தேங்கி காணப்படுகிறது. குறிப்பாக நேற்றைய தினம் இரவில் சென்னையில் மழை பெய்ததால் அங்கு மழைநீர் தேங்கியுள்ளது.

கனமழை

இவ்வாறிருக்கையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, சேலம், திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தருமபுரியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment