காங்கிரஸ் கட்சியின் 137 வது நிறுவன நாள்: கட்சிக்கொடி அவிழ்ந்து விழுந்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி!

சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவில் மிக வலிமையான கட்சியாக காணப்பட்டது காங்கிரஸ். காலம் செல்ல செல்ல பல கட்சிகளின் காரணமாக காங்கிரஸ் கட்சி வலிமை சற்று குறைந்துவிட்டது. இருப்பினும் நம் தமிழகத்தில் ஆளும் கட்சியோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது.

காங்கிரஸ்

அதோடு நடைபெற்ற இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு மிகுந்த வரவேற்பு பெற்றது காங்கிரஸ் கட்சி மீது மீண்டும் நம்பிக்கை வந்ததை வெளிப்படுத்தியது. இத்தகைய காங்கிரஸ் கட்சி இன்றோடு நூற்றி முப்பத்தி ஏழு வது நிறுவன நாளை கொண்டாடுகிறது.

இந்த கொண்டாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடி அவிழ்ந்து விழுந்ததால் அங்கு தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றிய போது கம்பத்திலிருந்து கொடி அவிழ்ந்து விழுந்ததால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் 137 வது நிறுவன நாளை ஒட்டி கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவின்போது சோனியா காந்தி கொடி ஏற்றினார். கொடி கம்பத்தின் உச்சியில் சிக்கிக் கொண்ட கொடியை தொண்டர் இழுத்தபோது அவிழ்ந்து விழுந்தது. பின்னர் கொடியேற்றமலேயே காங்கிரஸ் கட்சியின் 137 வது நிறுவன நாள் விழா நடந்து முடிந்தது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment