13 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் தந்தை கைது!!

திருவொற்றியூயில் பெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமிக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவனுடம் காதல் மலர்ந்துள்ளது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை பெற்ற மகள் என்று கூட பார்க்காமல் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி! ஆளுநர் ஒப்புதலுக்கு கோரிக்கை – அமைச்சர் ரகுபதி!

இந்நிலையில் மகளின் உடலில் மாற்றத்தினை அறிந்த சிறுமியின் தாய் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தையை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உருதியாகியது.

அதிர்ச்சி! கர்ப்பிணி ஆசிரியர் மீது தாக்குதல்.. 22 மாணவர்கள் சஸ்பெண்ட்!!

மேலும், போக்சோவில் தந்தையை கைது செய்த மகளிர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.