தெற்கு ரயில்வே அறிவிப்பு: ஜாவத் புயல் காரணமாக நாளை 13 முக்கிய ரயில் சேவை ரத்து!

வங்கக்கடலில் இன்றையதினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கியுள்ளது. இவை நாளையதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 4 ஆம் தேதி புயலாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது.

southrn

வங்கக்கடலில் டிசம்பர் 4ஆம் தேதி உருவாகும் புயலுக்கு ஜாவத்  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜாவத்  புயலின் காரணமாக நாளை முக்கியமான 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாவத் புயல் ஒரிசா-ஆந்திரா இடையே கரையைக் கடப்பதால் 13 ரயில்கள் நாளையதினம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி புவனேஸ்வரம் தொடங்கி ராமேஸ்வரம் வாராந்திர அதிவேக ரயில் நாளை தினம் ரத்து செய்யப்படுகிறது. இதன் வண்டி எண் 21896 ஆகும்.

புருலியா-விழுப்புரம் வாரமிருமுறை இயக்கப்படும் அதிவேக விரைவு ரயில் சேவையும் நாளை நடத்தப்படுகிறது. இந்த ரயிலின் எண்  22605 ஆகும். ஹவுரா தொடங்கி சென்னை சென்ட்ரல் கோரமண்டல் அதிவேக விரைவு ரயில் நாளையதினம் ரத்து செய்யப்படுகிறது. இதன் வண்டி எண் 12844 .

ஹவுரா  தொடங்கி மைசூர் வாராந்திர அதிவேக விரைவு ரயில் புயல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.இதன் வண்டி எண் 22815 ஆகும்.  சந்திரகாசி தொடங்கி சென்னை சென்ட்ரல் வரை வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில் நாளை நடைபெறுகிறது. இதன் வண்டி எண் 22807 ஆகும்

ஹவுரா   தொடங்கி எஸ்வந்த்பூர் அதிவேக விரைவு ரயில் சேவை நாளை முழுமையாக செய்யப்பட்டுள்ளது.இதன் வண்டி எண் 12863 ஆகும்.

ஹவுரா  தொடங்கி சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் சேவை நாளை புயல் காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வண்டி எண் 12139 ஆகும். சில்சார் தொடங்கி திருவனந்தபுரம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வண்டி எண் 12508 ஆகும்.

பாட்னா தொடங்கி எர்ணாகுளம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் சேவை நாளை புயல் காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வண்டி எண் 22644 ஆகும். சென்னை சென்ட்ரல் தொடங்கி ஹவுரா கோரமண்டல் அதிவேக விரைவு ரயில் நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வண்டி எண்  12829 ஆகும்.

சென்னை சென்ட்ரல் தொடங்கி புவனேஸ்வரம் வாராந்திர அதிவேக விரைவு ரயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வண்டி எண் 12829 ஆகும். சென்னை சென்ட்ரல்   தொடங்கி ஹவுரா வாராந்திர அதிவேக விரைவு ரயில் சேவை நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் வண்டி எண் 12840 ஆகும். திருச்சி தொடங்கி ஹவுரா வரை வாரம் இருமுறை அதிவேக விரைவு ரயில் சேவை முழுமையாக செய்யப்பட்டுள்ளது இதன் பண்டியன் 12664 ஆகும்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment