Connect with us

24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை!!!

rain 7

தமிழகம்

24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில்… வானிலை மையம் எச்சரிக்கை!!!

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் திருப்பூர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல் கடலூர் புதுக்கோட்டை பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் குமரி கடல், தெற்கு வங்கக்கடல், கேரள கர்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top