எச்சரிக்கை: ஓரிரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு;

கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் தமிழகத்தில் பெருவாரியான மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகின்றன.

கனமழை

வடகிழக்கு பருவமழை மட்டுமின்றி வங்கக்கடலில் சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் சென்னை கடற்கரையை கடந்தாலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிதீவிர கன மழை பொழிந்தது.

இந்த நிலையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருநெல்வேலி செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. தேனி, தென்காசி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களில் சாலைகள் ,வீடுகள், மக்கள் என பலரும் பாதிப்பில் உள்ளாகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment