Connect with us

குஷியோ குஷி!! இன்று 13 மாவட்டங்களுக்கு வெளுக்கப்போதும் போகும் கனமழை…

rain 2

தமிழகம்

குஷியோ குஷி!! இன்று 13 மாவட்டங்களுக்கு வெளுக்கப்போதும் போகும் கனமழை…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று 13 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌, தர்மபுரி, திருப்பத்தூர்‌, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும்‌ சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதே போல் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top