12th Exam Result: 12-ம் வகுப்பு பொதுதேர்வு ரிசல்ட் எங்கே பார்க்கலாம்? – அரசு அதிரடி அறிவிப்பு!

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 8ம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் தேர்வெழுதினர்.

முதலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள நீட் தேர்வில் பங்கேற்பதில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் ரிசல்ட் தேதியை மாற்றிவைக்கும் படி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது நீட் தேர்வு நடந்து முடிந்த மறுநாள் காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை, tnresults.nic.in ; dge1.tn.nic.in ; dge2.tn.nic.in ; dge.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயக்கி வரும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.