நீட் தேர்வால் தள்ளி போகிறதா 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்?

12ஆம் வகுப்பு பொது தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த பொது தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதை அடுத்து மாணவர்களின் மன நலனை கருத்தில் கொண்டு இந்த தேர்வு முடிவை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதினர் என்பது தெரிந்தது.. இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொது தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து கூறிய நிலையில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

neet 1இந்த நிலையில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர் என்பதும் நீட் தேர்வு வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மே 5ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் 12 ஆம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து மே 5ஆம் தேதிக்கு பதிலாக நீட் தேர்வு முடிந்தவுடன் 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து முதலமைச்சர் உடன் ஆலோசனை செய்யப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். எனவே மே 5ஆம் தேதிக்கு பதிலாக மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.