10 ஆம் வகுப்பு தேர்ச்சியா? – தெற்கு ரயில்வேயில் 1,284 காலி பணியிடங்கள்!!

தெற்கு ரயில்வே மாதம் உதவிதொகையுடன் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு காலியாக உள்ள 1,284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் (வயது 15 – 22 ), ஐடிஐ முடித்தவர்கள் ( வயது 15 – 24) வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!!

இதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்படும் என்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் வருகின்ற 31 ஆம் தேதிக்குள் www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கார் வெடிப்பு: வெளியான புதிய தகவல்!

மேலும், சேலம், திருவனந்தபுரம், போத்தனூர், பாலக்காடு போன்ற இடங்களில் பணியிடங்கள் நிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.