
தமிழகம்
உயர்த்தியது 3 மடங்கு; குறைப்பது சிறிதளவா? பெட்ரோல், டீசல் வரியை மேலும் குறைக்க வேண்டும்…!!
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை தாறுமாறாக உயர்ந்து இருந்தது. இதனால் பலரும் அரசுக்கு பல்வேறு விதமான கோரிக்கைகளை வைத்தனர். இது குறித்து ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அரசு கடந்த நவம்பர் மாதத்திலேயே பெட்ரோல் மீதான வரிகளைக் குறைத்து உள்ளதாக கூறினார்.
மேலும் மாநில அரசுகள்தான் பொதுமக்கள் பயன்பட வேண்டும் என்று கருதி குறைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கு பலரும் தங்களது கருத்தினை கூறி கொண்டு வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை எட்டு ரூபாய் வரை குறைந்து வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியளித்தது.
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
3 மடங்குக்கு மேல் உயர்த்தி விட்டு சிறிதளவு மட்டுமே குறைந்துள்ளது என்றும் கூறினார். ஒன்றிய அரசு வரியை குறைத்தால் மாநிலங்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
2014 ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மீண்டும் பெட்ரோல், டீசல் மீதான வரியை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டு இப்பொழுது சிறிதளவு குறைந்துள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
