
தமிழகம்
கொடுத்து வச்சவங்க தமிழக மக்கள்!! அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்..
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று கூறியுள்ளது.
அதே போல் நாளை முதல் 24- ஆம் தேதி வரையில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும் என கூறியுள்ளது.
இப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
