1200 போலீஸ் பாதுகாப்பு!! நாளை வேளாங்கண்ணி ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்!!

புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா நாளைய தினத்தில் கொண்டாட இருப்பதாக கூறப்படுகிறது.

நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பெருவிழா நாளைய தினம் தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரையில் நடைப்பெற உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தற்போது தோற்றுப் பரவல் குறைந்து இருப்பதால் நடப்பாண்டில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய தினம் கொடியேற்றும் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்றுள்ளனர். அதோடு ஏராளமான வெளிமாநிலம் மற்றும் வெளி நாட்டவர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக 1200 போலீசார், ஊர் காவலர் படையினர் பாதுகாப்பு பணியில் இருப்பதாகவும், ட்ரோன்கள் மூலம் தொடர் கண்காணிப்பு பணிகள் நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment