Connect with us

என்னது ஒருகிலோ பிச்சிப்பூ 1200 ரூபாயா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

pichipoo 1

தமிழகம்

என்னது ஒருகிலோ பிச்சிப்பூ 1200 ரூபாயா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

என்னது ஒருகிலோ பிச்சிப்பூ 1200 ரூபாயா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

நாளுக்கு நாள் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக உணவுப் பொருட்கள், மலர்கள் போன்றவற்றின் விலை அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதில் பூக்களின் விலை பண்டிகை நெருங்கி விட்டால் இரட்டிப்பாக விலை உயர்த்தி வியாபாரம் செய்யப்படும்.

அதன்படி தை மாதத்தில் அமாவாசை நெருங்கிவிட்டதால் தமிழகத்திலுள்ள அனைத்து சந்தைகளில் பூக்களின் விலை பலருக்கும் வியக்கத்தக்க வகையில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தை அமாவாசையை முன்னிட்டு பிச்சிப்பூ கிலோ ஒன்றுக்கு ரூபாய் 1200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ கிலோ ஒன்றுக்கு 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேவேளையில் மல்லிகை கிலோ ஒன்றுக்கு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு எண்ணிய நிலையில் பிச்சிப்பூ கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாய்க்கும் மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

சந்தையை விட பல மடங்கு கூடுதல் விலையில் சுசீந்திரம், தேரூர் பகுதி சில்லரை வியாபாரிகள் பூக்களை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top