திடீரென விபத்துக்குள்ளான பள்ளி பேருந்து.. அதிர்ச்சியில் பள்ளி மாணவன் மரணம்

மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி பேருந்து ஒன்று திடீரென எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்த பள்ளி மாணவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. ஆனால் இந்த விபத்தின் அதிர்ச்சி காரணமாக மாணவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளி நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மாணவர்களுக்கு எந்த விதமான காயம் இல்லை என்றாலும் அந்த பேருந்தில் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மனிஷ் சென்ற மாணவருக்கு விபத்து காரணமாக அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் அரிதாகவே குழந்தைகளுக்கு மாரடைப்பு வரும் என்றும் பேருந்து மோதிய அதிர்ச்சியில் அந்த மாணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.