12 கிமீ இழுத்து சென்ற பெண் சடலம்!

டெல்லியில் சுல்தான்பூரியில் நள்ளிரவு , 20 வயதுடைய அஞ்சலி என்ற பெண் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்க அவரது வண்டியின் மீது கார் ஒன்று மோதியுள்ளது. மோதிய காரின் அடியில் அந்த பெண் சிக்கி கொள்ள , அந்த கார் அவரை 12 கிமீ வரை இழுத்து சென்றுள்ளது. அதனால் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு காரின் அடியில் பெண் இழுத்து செல்லப்படுவதாக அதிகாலை 3.24 மணிக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அதிகாலை 4.11 மணிக்கு ஒரு பெண்ணின் சடலம் சாலை ஓரம் இருப்பதாக தகவல் வர அதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை வைத்து இந்த வண்டியின் எண்ணை கண்டறிந்த அதிகாரிகள் 5 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்தவரின் கிரெடிட் கார்ட் கலெக்சன் ஏஜென்ட் ஓட்டுநர் உள்ளிட்டவர்கள் இருப்பதாக போலீசார் கூறியுள்ளார். இது குறித்து பாதிக்க பட்ட பெண்ணின் தாய் கூறுகையில் , அந்த ஆண்கள் அவளை பாலியல் வன்கொடுமை செய்திருக்க வேண்டும். இல்லைஎன்றால் அவளுடைய ஆடைகள் முழுவதும் கிழிந்திருக்க வாய்ப்பில்லை.

அவளது உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது அவள் நிர்வாணமாக இருந்திருக்கிறாள் , இதில் முழு விசாரணையும் நிதியும் எனக்கு வேண்டும் , என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இனி ரூபாய் நோட்டுகள் செல்லாது !

டெல்லி காவல் துறை அதிகாரி ஹரிந்திரா கே சிங் இச்சம்பவம் குறித்து கூறுகையில், கார் நம்பரை வைத்து குற்றம் சாட்டபட்டவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.குற்றம் சாட்டபட்டவர்கள் தங்களது கார் ஓரி ஸ்கூட்டியுடன் மோதியதாக கூறியுள்ளனர்.,அதனால் அந்த பெண்ணை பல கிமீ இழுத்து சென்றதை அவர்கள் அறியாததை அவர்கள் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.