
News
நவம்பர் 1-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு 12 மணி நேரம் ரேஷன் கடை திறப்பு!!
நவம்பர் 1-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு 12 மணி நேரம் ரேஷன் கடை திறப்பு!!
தீபாவளி தினத்தை ஒட்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதுப்புது விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.குறிப்பாக நியாயவிலை கடைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுகிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியில் நியாய விலை கடை 12 மணி நேரம் இயங்கும் என்று அம்மாநில அரசு ஏற்கனவே கூறியுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசும் தீபாவளி பண்டிகை காரணமாக நியாய விலை கடை திறப்பு நேரம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை ரேஷன் கடை நேரம் திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவை சென்னை வடக்கு மற்றும் தென் மண்டலங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொருந்தும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
அதன்படி இந்த ரேஷன் கடைகளில் காலை 8 மணி தொடங்கி இரவு 7 மணி வரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்க இயலாதவர்கள் வழக்கம்போல் நவம்பர் 7ஆம் தேதி முதல் பொருட்களை பெறலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
