தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை அப்டேட்!!

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்காது : ஜெய் ஷா திட்டவட்டம்!!

அதே போல் திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம் நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

ரூ.1500 கடன்! திரும்ப தராததால் 2 கி.மீ தூரம் பைக்கில் இழுத்து சென்ற அவலம்..!!!

மேலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment