12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு!!!

நம் தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சமயத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இந்த 12 மாவட்டங்களில் பெரும்பாலும் தென் தமிழக மாவட்டங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை இந்த 12 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அதன்படி நீலகிரி, தேனி,மதுரை, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல், ஈரோட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

வட தமிழக மாவட்டங்களில் அனல் காற்று வீசும் இந்த நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment