ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்துக் குறைவால் உயிர் இழந்த 12 குழந்தைகள்.. 450க்கும் அதிகமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானை தாலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டு அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பியது.

தாலிபான்கள் ஆட்சியை அமைத்தநிலையில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் கவனம் செலுத்தத் தவறிவிட்டனர். இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் உணவுப் பற்றாக்குறைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தாலிபான்கள் மற்ற நாடுகளிடம் உதவிகளை நாடிவரும் நிலையில் பல நாடுகளும் உதவி செய்ய முன்வரவில்லை. இந்திய அரசு சமீபத்தில் பல டன் கோதுமைகளை அனுப்பி உதவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் போதிய அளவு சத்தான உணவுகள் கிடைக்காமையால் ஆப்கானிஸ்தானில் 450 க்கும் அதிகமான குழந்தைகள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தக் குழந்தைகள் 12 குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்துள்ளனர். இருப்பினும் குழந்தைகளுக்குப் போதிய உணவுகள் கிடைக்கும் வகையிலான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews