இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 239 பேர் உயிரிழப்பு! கொரோனா பாதிப்பு குணமடைந்தவரின் எண்ணிக்கை!

நம் இந்தியாவில் ஒமைக்ரான் மற்றும் கொரோனாவின் தாக்கமும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவில் ஒரே நாளில் 6358 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 40 லட்சத்து 93 ஆயிரத்து 333 லிருந்து, 3 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 691 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 450 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதனால் இந்தியாவில் குணமடைந்தவரின் எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 37 ஆயிரத்து 405 லிருந்து 3 கோடியே 42 லட்சத்து 43 ஆயிரத்து 945 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்து விகிதம் 98.4 சதவீதமாக காணப்படுகிறது. உயிரிழப்பு விகிதம் 1.38 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 293 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்து 997 லிருந்து, 4 லட்சத்து 80 ஆயிரத்து 200 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 70 ஆயிரத்து 456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 142.46 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 72 லட்சத்து 87 ஆயிரத்து 547 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 8 கோடியே 23 லட்சத்து 81 ஆயிரத்து 586 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment