தடுப்பூசி போடலைன்னா தயவுசெய்து வெளியே வராதீர்கள்!! 11 நாள் ஊரடங்கு!!

ஊரடங்கு

உலகில் உள்ள பல நாடுகளை அச்சத்தை கொடுத்த நோயானது கொரோனா. இந்த கொரோனா நோயானது தற்போது பல நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்டன. இருப்பினும் நேற்றைய தினம் சீனாவில் எதிர்பாராத விதமாக இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து இருந்தது. புதின்

அதை தொடர்ந்து தற்போது மற்றுமொரு வல்லரசு நாடான ரஷ்யாவிலும் இந்த கொரோனா  நோயின் தாக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி அங்கு ஒரு நாள் உயிரிழப்பு 1036 ஆக பதிவாகியுள்ளது.

இதுவே ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் வருகின்ற 30ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்த உள்ளார்.

இதனால்  ரஷ்யாவில் 11 நாள் முழு ஊரடங்கு இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்தந்த மாகாண ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும் என்றும் அதிபர் புதின் கூறியுள்ளார்.

ரஷ்ய நாட்டின் தலை நகரமான மாஸ்கோவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால்  நான்கு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print