ஹிந்தி மொழியா..? உங்க சகவாசமே எனக்கு வேண்டாம்; நடிகர் மகேஷ் பாபு !!

ஹிந்தி படங்களில் நடித்து நேரத்தை வீணாக்க வில்லை என தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கூறியிருப்பது திரைத்துறையில் மீண்டும் மொழிப் பிரச்சினை குறித்த விவாதம் எழுந்துள்ளது.

ஹிந்தி திணிப்பு குறித்து ஹிந்தி நடிகர்களுக்கும் பிற நடிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வரும் நிலையில் தற்சமயம் நடிகர் மகேஷ்பாபு இந்த கருத்தை தெரிவித்துள்ளார். நடிகர் மகேஷ்பாபு நடித்த சர்காரு வாரி பாட்டா என்ற படம் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஹிந்தி சினிமா பொருத்தவரையில் தனக்கு போதுமான சம்பளத்தை கொடுக்க முடியாது என்றும் அங்கு சென்று தன்னுடைய நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என கூறினார்.

தென் மாநிலங்களில் கிடைத்திருக்கும் மரியாதை தனக்கு போதுமானது என்றும் இந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் தெலுங்குலிருந்து உலகம் முழுவதும் புகழ் பெற உள்ளதாக கூறினார்.

ஹிந்தி மொழி குறித்து கடந்த சில நாட்களாக சக நடிகர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போது மகேஷ் பாபு கூறி இருப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment