தமிழகத்தின் நடப்பாண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று போக்குவரத்துத் துறை மற்றும் சுற்றுலாத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது.
இதில் போக்குவரத்துத் துறை மீதான மானிய கோரிக்கையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் படி, அனைத்து வகை பேருந்துகளிலும் ஐந்து வயதிற்குஉட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என கூறியுள்ளார்.
குறிப்பாக தமிழகத்தில் மூன்று வயதுடைய குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வகை பேருந்துகளிலும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இலவசம் என அறிவித்துள்ளார்.
அதோடு விழா நாட்களை தவிர இதர நாட்களில் இணையதளம் மூலமாக இருவழி பயணச்சீட்டு பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10% கட்டண தள்ளுபடி வழங்கப்படும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
மேலும், பள்ளி வாகனங்களுக்கு முன், பின் புறங்களில் கேமராவுடன், சென்சார் கருவி பொருத்தும் வகையில் சிறப்பு விதிகள் கொண்டுவரப்படுவதாகவும் தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறை அறிமுகம் செய்வதாக அமைச்சர் கூறியுள்ளார்.