விலை ஏறவுமில்லை, இறங்கவில்லை! 28 நாட்களாக ஒரே வேகத்தில் செல்லும் பெட்ரோல், டீசல்

நம் இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டுதான் வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தான் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்கவில்லை என்றும் மத்திய அரசு நவம்பர் மாதமே எரிபொருள் மீதான வரியை குறைத்து விட்டதாக கூறியிருந்தார்.

இதற்கு அமைச்சர்கள் பலரும் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் நம் தமிழகத்தில் கடந்த 28 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி சென்னையில் 28 நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 110.85 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே வேளையில் ஒரு டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமின்றி ரூபாய் 100.94 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையில் மாற்றம் இல்லை என்றாலும் கூட வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு தான் காணப்படுகின்றனர்.

இதனால் வரும் நாட்களில் பெட்ரோல் டீசல் விலை சற்று குறையலாம் என்றும் எதிர்பார்ப்போடு பலரும் காத்துக் கொண்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment