ஆன்லைன் தேர்விலும் முறைகேடு! படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேர்!!

கடந்தாண்டு முதல் ஆன்லைன் தேர்வுகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. பலரும் இதை புரோஜனமாக பயன்படுத்தி தேர்வு எழுதினர். இந்த ஆன்லைன் தேர்வில் ஒரு சிலர் முறைகேடு செயலில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்தது. படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற 117 பேர் சிக்கினர்.

சென்னை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் படித்து அரியர் வைத்தவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத கடந்த ஆண்டு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர், நடப்பாண்டு ஏப்ரல், நவம்பர் என ஆன்லைனில் தேர்வு எழுத மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

ஆன்லைல் தேர்வில் மோசடி செய்து படிக்காதவர்களுக்கும் பட்டம் வாங்கி கொடுக்க முயற்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நபரிடமும் தலா 3 லட்சம் வரை பணம் பெற்ற தனியார் தொலைதூர கல்வி மையங்கள் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

டிசம்பரில் ஆன்லைன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சிலர் பட்டங்களை வழங்கும் போது மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. தொலைதூர கல்வி நிறுவனத்தில் பயின்றதற்கான கல்வி கட்டணம், சேர்க்கை விவரங்கள், பதிவேடுகளில் இல்லாததால் 117 பேர் சிக்கினர்.

படித்து முடித்ததாக போலி சான்றிதழ் தயார் செய்து அதன் அடிப்படையில் ஆன்லைன் தேர்வுக்கு கட்டணம் செலுத்தி மோசடி நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. பெரும்பாலானோர் பி.காம் மற்றும் பி.பி.ஏ பட்டங்களை குறிவைத்து மோசடி செயலில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டமாக கண்டறியப்பட்ட 117 பேர் தேர்வு முடிவுகளை ரத்து செய்து சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. மோசடிக்கு துணை போன பல்கலைக்கழக அதிகாரிகள் தனியார் மையங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment