Connect with us

நாளை கூடுகிறது தமிழக சட்டபேரவை!! விவாதத்தில் யார் கலந்து கொள்வது?

தமிழக அரசு

தமிழகம்

நாளை கூடுகிறது தமிழக சட்டபேரவை!! விவாதத்தில் யார் கலந்து கொள்வது?

நாளை கூடுகிறது தமிழக சட்டபேரவை!! விவாதத்தில் யார் கலந்து கொள்வது?

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மீண்டும் தொடங்குகிறது. தமிழகத்தில் சட்டசபை கூட்டம் கடந்த 6- ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அன்றைய தினம் முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்தது. குறிப்பாக கடந்த 13- ஆம் தேதி வேளாண்மை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை ஆகிய மாநிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து 14- ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் நாளை சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை, இயற்கை சீற்றம், துயர் தணிப்பு துறை  ஆகிய மானியகோரிக்கை விவாதம் நடைபெறும். விவாதத்திற்கு வருவாய் துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதில் அளித்து துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

மேலும், வருகின்ற மே 10- ஆம் தேதி வரையில்  சட்டசபை கூட்டம் நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் சில முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றவும், முதலமைச்சர் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top