அப்படிபோடு…! அப்ப விட்டத இப்ப பிடிச்சிட்டாரே.. பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் இவர்தானா ?
ஹாட் ஸ்டாரில் 24 மணிநேரமும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகினார். தற்போது கடந்த சில வாரங்களாக நடிகர் சிம்பு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன் , நிரூப் நந்தகுமார், ஜூலி மரியானா, அபிராமி வெங்கடாசலம், பாலாஜி முருகதாஸ் மற்றும் தாமரை செல்வி ஆகியோர் பிக்பாஸ் அல்டிமேட்டின் இறுதிப் போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதில் ரம்யா வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தது குறிப்பிடத்தக்கது.
சுமார் 70 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் இந்நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைவதால் இறுதி போட்டியாளர்களான பாலா, நிரூப், ரம்யா பாண்டியன், தாமரை என 4 போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால் தாமரை தற்போது பைனல்ஸ் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, ஏற்கனவே 4-வது சீசனில் 2- ஆம் இடத்தை பிடித்த பாலாதான் வின்னர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாலாவின் பிக்பாஸ் வின்னர் என்ற கனவு நனவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
