ரிலீஸீக்கு முன்பே தெறிக்கவிட்ட பீஸ்ட் !! தமிழகம் முழுவதும் எத்தனை திரையரங்குகளின் வெளியாகிறது தெரியுமா ?
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வரும் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் படக்குழு அதிகார்வபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் காதலர் தினத்தில் இப்படத்தில் வெளியான அரபிக்குத்து பாடல் பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கிளப்புயது. அதுமட்டுமில்லாமல் யூடியூப்பிலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இப்படி நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தமிழகமெங்கும் எத்தனை திரையரங்குகளில் வெளியாகும் என்ற கேள்வி அனைவர் இடத்திலும் எழுந்துள்ளது.
அந்த வகையில் தளபதியில் பீஸ்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும் 800 – 850 திரையரங்குகள் வரை வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பீஸ்ட் படத்திற்கு போட்டியாக KGF 2 திரைப்படம் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
