Connect with us

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் ரூ.110 கோடி சொத்துக்கள் முடக்கம்!

velumani

தமிழகம்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் ரூ.110 கோடி சொத்துக்கள் முடக்கம்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் ரூ.110 கோடி சொத்துக்கள் முடக்கம்!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்ததுக்கு பின்பு தமிழகத்தில் அதிகளவு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக எதிர்க்கட்சியான அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அதன்படி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூட்டாளிகள் 2 பேரின் ரூபாய் நூற்றி பத்து கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை ஏற்று ரூபாய் நூற்றி பத்து கோடி நிரந்தர வைப்பு தொகையை முடக்கியது ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.

கேசிபி இன்புரோ லிமிடெட், ஆலம் கோல்டன் அன்ட் டைமண்ட் லிமிட்டட் ரூபாய் நூற்றி பத்து கோடி நிரந்தர வைப்பு தொகை வைத்துள்ளன. கேசிபி இன்ப்ரோ ரூபாய் 109 கோடியும், ஆலம் கோல்டு ரூபாய் 1.8 கோடி நிரந்தர வைப்புத் தொகை வைத்துள்ளன.

இரண்டு நிறுவனங்களும் முறைகேடாக பெற்ற ரூபாய் நூற்றி பத்து கோடி பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளதாகவும் குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. நிரந்தர வைப்பு தொகை முடக்கிய நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு சென்னை, கோவை மாநகராட்சியில் ஒப்பந்தம் வழங்கிய பிறகு நிரந்தர வைப்பு தொகை செய்யப்பட்டுள்ளது என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறியுள்ளனர். மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை புகார் அளித்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி கூட்டாளிகளுக்கு சொந்தமான இரண்டு நிறுவனங்களும் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.

அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் பேரில் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்தங்களை உறவினர்களுக்கு வழங்கியதாக எஸ்.பி.வேலுமணி மீது புகார் அளிக்கப்பட்டது.

உறவினர்களுக்கு முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்க எஸ்.பி.வேலுமணி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில் எஸ்.பி. வேலுமணி அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் நிரந்தர வைப்பு தொகை ரசீதுகள் கைப்பற்றப்பட்டன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top