11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோவில் முதியவர் கைது!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

நம் தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் சற்றும் குறைந்தபாடில்லை.

மைசூரிலும், குலசையிலும் மட்டும் தசரா திருவிழாவைக் கொண்டாடுவது ஏன்?

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வசித்து வரும் 11 வயது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் பெற்றோர் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் கருவுற்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

மகாத்மா காந்தி பிறந்த நாள்: காங்கிரஸ் கட்சியினர் மரியாதை..!!!

அப்போது அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது. இதனிடையே சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணனை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.