Connect with us

தமிழகத்தில் 11 அதிகாரிகள் இடமாற்றம்: பள்ளி கல்வித்துறை அதிரடி!!

education department

தமிழகம்

தமிழகத்தில் 11 அதிகாரிகள் இடமாற்றம்: பள்ளி கல்வித்துறை அதிரடி!!

தமிழகத்தில் 11 கல்வித்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி தஞ்சாவூருக்கும், சென்னை தொடக்கக்கல்வி இயக்ககம் துணை இயக்குனர் வெற்றிச்செல்வி காஞ்சிப்புரத்திற்கும், காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி திருப்பூர் என மாற்றப்பட்டுள்ளார்.

அதே போல் மதுரை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் சிவகங்கை மாவட்டத்திற்கும் நீலகிரி முதன்மை கல்வி அலுவலர் நசருதீன் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் புதுக்கோட்டை என இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன் நீலகிரிக்கும், திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலர் விஜயா சென்னை தொடக்கக் கல்வி இயக்ககம் துணை இயக்குனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், நாமக்கல் கல்வி அலுவலர் திருவள்ளூர் மாவட்டத்திற்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலர் கார்த்திகா மதுரை மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா  அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top