எம்மாடியோவ். செம பிசினஸா இருக்கும் போலயே.. நேற்று ஒருநாளில் மட்டும் மாஸ்க் அணியாதவர்கள் செலுத்திய அபராதம் இத்தனை லட்சமா?
கொரோனாப் பரவல் வட மாநிலங்களில் வலுப்பெறத் துவங்கியுள்ள நிலையில் தென் மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வார இறுதியில் முழு ஊரடங்கு, கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் முகக் கவசம் அணிதல் போன்றவை கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கண்காணிப்புப் பணியில் சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
பல வகையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் இரவு நேர ஊரடங்கை மீறுவதும், முகக் கவசம் அணியாமல் வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
நேற்று ஒருநாளில் மட்டும் இரவு நேர ஊரடங்கை மீறியதற்காக 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அத்துடன் 185 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் மாஸ்க் அணியாமல் வந்த 5,666 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.11, 33, 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த அபாரதத் தொகையானது பழைய கட்டணமான ரூ200 ரூபாயாகவே வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி சார்பில் இரவு நேர ஊரடங்கு, சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல், மாஸ்க் அணிதல் குறித்த விழிப்புணர்வானது இன்று வாகனங்களில் மைக் கட்டி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
